வித்தியா கொலை வழக்கு! தீர்ப்புக்கான கடைசி திகதி அறிவிப்பு!

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பு இம்மாதம் 27ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வித்தியா கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் ட்ரயல் அட்பார் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகின்றது. இதையடுத்து இன்று எதிரிதரப்பு சாட்சியங்களின் தொகுப்புரை வழங்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் தீர்ப்பாயம் எதிர்வரும் 27ஆம் திகதி கூடும் என்று தெரிவிக்கப்பட்டதுடன், அன்றைய தினமே தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வித்தியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒன்பது சந்தேகநபர்களில் முதலாம் ஏழாம் எதிரிகள் தவிர்ந்த ஏனையோருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளதாக வித்தியா படுகொலை வழக்கின் தொகுப்புரையில் பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் குமார் ரட்ணம் நேற்று தெரிவித்திருந்தார். அந்த வகையில், 2ஆம் எதிரியான பூபாலசிங்கம் ஜெயக்குமார், 3ஆம் எதிரியான பூபாலசிங்கம் தவக்குமார், 4ஆம் எதிரியான மகாலிங்கம் சசிதரன், 5ஆம் எதிரியான தில்லைநாதன் சந்திரகாசன், 6ஆம் எதிரியான சிவதேவன் துஷாந்தன், 8ஆம் எதிரியான ஜெயதரன் கோகிலன், 9ஆம் எதிரியான மகாலிங்கம் சசிக்குமார் என்போருக்கே எதிர்வரும் 27ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
print

Comments

comments

Share Button

Related posts

2 Thoughts to “வித்தியா கொலை வழக்கு! தீர்ப்புக்கான கடைசி திகதி அறிவிப்பு!”

  1. Thamarai

    சூப்பர்

  2. கட்டையமாக இவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்

Leave a Comment